ஸ்ரேயா ஹீரோயினாக நடிப்பதை அறிந்து பயந்தேன் - சித்தார்த்!!!

Wednesday, 9th of January 2013
சென்னை::ஸ்ரேயா ஹீரோயினாக நடிப்பதை அறிந்து பயந்தேன் என்றார் சித்தார்த். ‘பாய்ஸ்‘ படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். கடைசியாக அவர் நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி‘ படம் ரிலீஸ் ஆனது. இந்தியில் ‘ரங் தே பசந்தி‘ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தீபா மேத்தா இயக்கும் ‘மிட்நைட்ஸ் சில்ரன் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் நடித்த அனுபவம் பற்றி சித்தார்த் கூறும்போது, ‘ஸ்ரேயா ஹீரோயினாக நடிக்கிறார் என்றதும் பயம் ஏற்பட்டது. ஏனென் றால் அவரது கதாபாத்திரம் வலுவானது. அதற்கு சமமாக கடினமான உழைப்பின் மூலம் அந்த பயத்தை கடந்து வந்தேன். எனது கதாபாத்திரம் நன்றாக வந்திருக்கிறது. இதுவரை ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலிருந்து இது மாறுபட்டிருக்கும் என்றார்.

Comments