பிரபுதேவாவின் எல்லா பாய்ஸும் டான்ஸ் ஆடலாம்!!!

Tuesday,8th of January 2013
சென்னை::தமிழில் நடனத்தை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த போடா போடியும்கூட நடனத்தை மையப்படுத்தியதே. ஆனாலும் ஹhலிவுட்டில் வெளிவந்திருக்கும் ஸ்ட்‌ரிட் டான்ஸ், ஸ்டெப் அப் போன்ற முழுக்க நடனம், நடனம் அன்றி வேறில்லை என படங்கள் இந்திய அளவில் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

இந்தக் குறையை போக்கும் விதமாக பிரபுதேவா நடித்திருக்கும் படம் ஏபிசிடி. எனிபடி கேன் டான்ஸ் என்பதன் சுருக்கம். ஸ்டெப் அப் திரைப்படத்தைப் போல இந்த ஏபிசிடி யும் 3டி யில் தயாராகியுள்ளது. அந்தவகையில் 3டி யில் தயாரான முதல் இந்திய நடனத் திரைப்படம் என இதனை சொல்லலாம்.

இந்தப் படத்தை தமிழில் அதே பெயாpல் வெளியிடுகிறார்கள். தமிழில் ஏபிசிடி யின் வி‌ரிவு, எல்லா பாய்ஸும் டான்ஸ் ஆடலாம். தமிலிங்கிலீஷ்.

நடனத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் இந்தப் படத்தில் காதலன் படத்தில் தான் ஆடிய முக்காலா முக்காபுலா பாடலை இணைத்திருக்கிறார் பிரபுதேவா. இந்தியாவையே ஆட வைத்தப் பாடல் என்பதால் ‌ரிமிக்ஸ் மொந்தையில் இப்பாடல் இடம்பெறுகிறது.

பிப்ரவ‌ரி மாதம் இப்படம் வெளியாகும் என தெ‌ரிகிறது.

Comments