Tuesday,22nd of January 2013
சென்னை::சுந்தரபாண்டியனின் வெற்றி அதன் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனை உதயநிதி ஸ்டாலினிடம் கொண்டுபோய் நிறுத்தி விட்டது. காமெடியுடன் சின்ன ஆக்ஷன் உள்ள கதையாக தேடிக்கொண்டிருந்த உதயநிதிக்கு பிரபாகரன் சொன்ன கதை பிடித்துவிடவே தனது அடுத்த படத்தை டிக் அடித்து விட்டார். படத்தின் பெயர் "இது கதிர்வேலின் காதல்" ஒரு கல் ஒரு கண்ணாடியிலேயே நயன்தாரா நடிக்க வேண்டியது. அப்போது அவர் பிரபுதேவாவுடன் தீவிர காதலில் இருந்ததால் உதயநிதியின் கோரிக்கைக்கு நோ சொன்னார். இப்போது காதல் முறிந்து விட்டதால் ஓகே ஓகே என்று சொல்லிவிட்டார்.
அண்மையில் இதன் போட்டோ ஷூட் நடந்தபோது இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உள்ள உதயநிதிக்கு நிறைய தைரியம் கொடுத்து போட்டா ஷூட் எடுக்க உதவினாராம் நயன்தாரா. உதயநிதியின் மனைவியிடம் "சினிமாவில் நடிக்க கூச்சம் இருக்க கூடாது. இந்தப் படம் முடிவதற்குள் உங்க கணவரை மாத்திக்காட்டுறேன்"னு சொன்னாராம் நயன்தாரா. படத்துக்கு நீர்பறவை ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம்மே ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இப்போதே 5 பாடல்கள் ரெடி என்கிறார்கள். "ஜாலியான காமெடி படம்தான். ஆனாலும் நட்புக்கும், காதலுக்கும் முக்கியத்தும் இருக்கும். சின்னதா ஒரு மெசேஜும் சொல்றோம். உதயநிதி சாருக்கு பத்து பேர் பறந்து அடிக்கிற ஆக்ஷன் பிளாக் சரியாக வராது என்பதால் சின்னதா சண்டை வச்சிருக்கோம். உதயநிதி சாரை அடுத்த கட்டத்துக்கு இந்தப் படம் கொண்டுபோகும்" என்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
Comments
Post a Comment