முருகதாஸ் படத்தில் அஜீத் குமார் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன!!!

Monday,21st of January 2013
சென்னை::முருகதாஸ் படத்தில் அஜீத் குமார் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது விஷ்ணுவர்த்தன் படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்ததாக சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பிறகு அஜீத் - முருகதாஸ் கூட்டணி இணைகிறது.

அண்மையில் அஜீத்தை சந்தித்த முருகதாஸ் படத்தின் கதையில் ஒரு வரியை சொல்லியிருக்கிறார். கதை அஜீத்துக்கு பிடித்துவிடவே உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். தீனா படத்துக்குப் பிறகு அஜீத் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் கைகோர்க்க இருக்கும் இந்தப் படத்தில் அஜீத் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments