அஜித் படத்தின் பெயர் சிவந்த மண்?!!!

Tuesday,15th of January 2013
சென்னை::விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் பெயரை தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தில் அவருடன் நயன்தாரா, ஆர்யா, தாப்ஸி, ராணா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். ஆக்ஷன் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாமல் இருந்தது.
தற்போது சிவாஜியின் சிவந்தமண் படத்தின் பெயரை தேர்வு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரபூர்வமாக இது அறிவிக்கப்படவில்லையென்றாலும் இதுவே இறுதி பெயராக இருக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

Comments