Friday,25th of January 2013
சென்னை::அமீரை முழுமையாக நம்பி ‘ஆதிபகவன்’ படத்தில் நடித்திருக்கிறேன் என்றார் ஜெயம் ரவி. இதுபற்றி அவர் கூறியதாவது: ‘ஆதிபகவன்’ படத்தில் அமீர் இயக்கத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாது. ஆரம்பத்தில் அவரிடம் நடிக்க தொடங்கியபோது சற்று அந்நியமாக உணர்ந்தேன். சில நாட்களில் அது சரியாகிவிட்டது. முழுமையாக இயக்குனர் அமீரை நம்பியே நடித்தேன். 5 வித கெட்டப்பில் வருகிறேன். ஒவ்வொரு கெட்டப்புக்கும் வித் தியாசம் காட்ட வேண்டி இருந்தது. இதனால் காத்திருந்து நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்பவே ஷூட்டிங் நடத்தப்பட்டது.
மேலும் கதைப்படி வரிசையாக காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆதி என்ற கதாபாத்திரத்தின் தன்மையை நன்கு உணர்ந்து, இதில் நடித்தேன். அடுத்து கல்யாணகிருஷ்ணன் இயக்கும் ‘பூலோகம்’ படத்தில் பாக்ஸராக நடிக்கிறேன். வடசென்னையை சேர்ந்த 2 குடும்பங்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்ட கதை. சமுத்திரகனி இயக்கத்தில் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடிக்கிறேன். படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. அடுத்து எனது அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளேன். இப்போதைக்கு முழு கவனமும் நடிப்பின் மீதுதான் உள்ளது. இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.
Comments
Post a Comment