Friday,11th of January 2013
சென்னை::சாருலதா படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்தார் ப்ரியாமணி. எந்த நடிகைகளும் செய்யத்துணியாத வேடம் என்பதால், அந்த படத்திற்கு பிறகு தன்னைத்தேடி சவாலான வேடங்கள் வரும் என்று எதிர்பார்த்திருந்தார் நடிகை. ஆனால், அந்த படத்திற்கு பிறகு ப்ரியாமணியின் மார்க்கெட்டே டல்லடித்து விட்டது. இதனால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உள்ள தனது அபிமானிகளை சந்தித்து சான்ஸ் கேட்டு பலன் அளிக்காததால் இப்போது கன்னட சினிமாவை தஞ்சமடைந்து விட்டார்.
அதோடு சென்னையில் இருந்த தனது வீட்டைகூட காலி பண்ணி விட்டு நிரந்தரமாக பெங்களூருக்கு குடிபெயர்ந்து விட்டார் ப்ரியாமணி. இதற்கு முக்கிய காரணம், அங்குள்ள சில நடிகர்கள் தொடர்ந்து அவரை ஆதரிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம். இதன்காரணமாக, இனிமேற்கொண்டு அதிரடி கிளாமர் நடிகையாகவும் உருவெடுக்க முடிவு செய்துள்ள ப்ரியாமணி, வித்யாபாலன் பாணியில் அதிரடி கிளாமர் கதைகளை படமாக்கும இயக்குனர்களுடன் ரகசிய மீட்டிங் போட்டு வருகிறார்.
Comments
Post a Comment