Sunday,6th of January 2013
சென்னை::ரஜினியின் தங்கமகன் படத்தின் பெயரை விஜய்யின் படத்துக்கு வைத்தார்கள் என்றும் இதனால் ரஜினி ரசிகர்கள் கோபப்பட்டார்கள் என்றும் சில வாரங்கள் முன்பு செய்தி வெளியானது நினைவிருக்கலாம். கண்ணன், கிருஷ்ணன், சிவா, லட்சுமி, பார்வதி என்று கடவுளின் பெயரையே மனிதனுக்கு வைக்கும் போது ஒரு நடிகரின் படத்தின் பெயரை இன்னொரு நடிகர் பயன்படுத்தினால் லூஸுத்தனமாக ஏன் எதிர்க்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. நடிகர்கள் விஷயத்தில் நமக்கிருக்கும் இந்த சொரணை சமூக விஷயங்களில் மட்டும் இல்லாதது ஏன்?
சரி, விஷயத்தை சீரிஸாக்காமல் விஷயத்துக்கு வருவோம்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தின் பெயரைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். தலைவன், தங்கமகன் இரண்டும் எட்டாக்கனியான நிலையில் தளபதி என்ற ரஜினி படத்தின் பெயரையே மீண்டும் தேர்வு செய்திருப்பதாகத் தகவல்.
இந்தப் பெயருக்கு மணிரத்னத்திடம் அனுமதி பெற வேண்டும். பூஜை, புனஸ்காரம், ஆடியோ விழா போன்ற கருமாந்திரங்களை கண்டுக்காத மணிரத்னம் இந்த தலைப்பை மட்டும் தர மறுப்பாரா என்ன....
ஆக, விஜய் படத்தின் தலைப்பு தளபதிதான் என்று அடித்து சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment