Monday,21st of January 2013
சென்னை::தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது.
ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இந்நிலையில் இவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் இணைய உள்ளனர். படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை கிளவுட் நைன் மூவிஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. தலைப்பு மற்றம் மற்ற நடிகர், நடிகைகள் விவரங்கள் குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
தற்போது தன்னுடைய உதவி இயக்குனர்களின் படங்களில் கவனம் செலுத்தி வரும் வெற்றி மாறன் இதன் பிறகே தனுஷை வைத்து இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment