விஸ்வரூபம் - கமலுக்கு ஆதரவாக திரையரங்குகள்!!!

Sunday,6th of January 2013
சென்னை::திரையரங்கு உ‌ரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் வாரம் இரண்டு அவசர‌க் கூட்டம் போட்டு விஸ்வரூபத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள். இதுவரை ஒரு டஜன் கூட்டம் நடத்தியாயிற்று. திருச்சியில் நடந்த கூட்டத்துக்கு திரையரங்கு உ‌ரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று நூற்றுக்கணக்கானவர்களை கூட்டி நாங்கதான் காம்ப்ளான் பாய் என்று காட்டினார்கள். ஆனால்...?

விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் 36 திரையரங்குகளில் - இது கோயம்புத்தூர் பகுதியில் மட்டும் - விஸ்வரூபத்தை வெளியிடுவதாக விளம்பரம் தந்திருக்கிறார். சென்னையில் தேவி காம்ப்ளக்ஸ் விஸ்வரூபத்தை வெளியிட‌த் தயாராகவும், ஆர்வமாகவும் இருப்பதாக அறிவித்துள்ளது.

விஸ்வரூபத்தை வெளியிடும் திரையரங்குகள் எந்த திரைப்படத்தை வெளியிட்டாலும் அந்தப் படத்தை புறக்கணிப்போம் என்று நமது காம்ப்ளான் பாய்கள் கடுமையாக சாடிய பிறகும் தேவி காம்ப்ளக்ஸ் இப்படியொரு அதரவை தெ‌ரிவித்திருப்பது எதிர் முகாமை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதாவது தேவி திரையரங்கு விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அத்திரையரங்கு எந்தத் திரைப்படத்தை வெளியிட்டாலும் - உதாரணமாக கோச்சடையானை வெளியிடுவதாக இருந்தால் மற்ற திரையரங்குகள் கோச்சடையானை வெளியிடாமல் புறக்கணிக்கும். இப்படியொரு செக் வைத்தால் தேவி திரையரங்குக்கு யாரும் தங்களது படத்தை தர மாட்டார்கள் அல்லவா.

இந்த‌க் கெடுபிடியைத் தாண்டி சென்னையில் உள்ள பல திரையரங்குகள் விஸ்வரூபத்தை வெளியிட ஆர்வமாக உள்ளன. இதே நிலைதான் தமிழகமெங்கும். 11ஆம் தேதி நெருங்க நெருங்க காம்ப்ளான் பாய்களின் கெடுபிடி சுக்குநூறாகப் போவது உறுதி.

Comments