என்னைவிட கார்த்திகாதான் அழகு ராதா மகள் துளசி பேட்டி!!!

Thursday,17th of January 2013
சென்னை::என்னைவிட கார்த்திகா தான் அழகுÕ என்றார் துளசி.ராதா மகள்கள் கார்த்திகா, துளசி. ‘கோÕ படத்தில் அறிமுகமானார் கார்த் திகா. ‘கடல் படத்தில் அறிமுகமாகி உள்ளார் துளசி. அவர் கூறியதாவது:என் அக்கா கார்த்திகா எனது அப்பா ஜாடையில் இருக்கிறார். என்னைவிட கார்த்திகாதான் அழகு. நான் எனது பாட்டி சாயலில் இருப்பதாக சொல்கிறார் கள். என் தந்தை சிறந்த பிஸ்னஸ்மேன். அவரைப்போலவே நானும் பிஸ்னஸில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று ஆசை. ஆனால் நடிக்க வந்துவிட்டேன்.

கார்த்திக்கும், என் அம்மா ராதாவும் நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்தை 10 முறைக்குமேல் பார்த்திருக்கிறேன். இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. நான் நடிக்க வந்திருந்தாலும் படிப்பை விடமாட்டேன்.
ஷூட்டிங் முடிந்த கையோடு டியுஷன், தோழிகளுடன் சுற்றுவது, தேர்வுக்கு படிப்பது என வழக்கமான பணிகளை தொடங்கி விட்டேன். எல்லாவற்றையும் விட படிப்பு முக்கியம் என்று எண்ணுகிறேன். எந்தவொன்றுக்காகவும் படிப்பை கைவிட மாட்டேன். எனது பெற்றோருக்கும் இந்த உறுதியை தந்தி ருக்கிறேன். நான் மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ், தெலுங்குபடம் ஒன்றுவிடாமல் பார்த்து விடுவேன்.

Comments