Friday,18th of January 2013
சென்னை::கிரிக்கெட் விளையாடும்போது இந்தி பட வாய்ப்பை பெறுவேன் என்றார் பிரியாமணி.
கடந்த 1 வருடத்துக்கும் மேலாக தமிழ் படத்தில் நடிக்காமலிருக்கும் பிரியாமணி இந்திக்கு போக திட்டமிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
கன்னடத்தில் ராகினி ஐபிஎஸ் என்ற படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடிப்பதாக தகவல் வருகிறது. ஆனால் இந்த படத்தில் நடிக்க நான் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. அப்படி இருக்கும்போது இப்படத்தில் நடிப்பதற்காக சண்டை கற்கிறேன் என்பது சரியல்ல. தெலுங்கில் 2 படங்களில் நடித்திருக்கிறேன். அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்.
இந்தி படங்களில் நடிப்பீர்களா? என்கிறார்கள். வாய்ப்புகள் வருகிறது. ஆனால் இந்தியில் நடிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் நட்சத்திரங்களுக்கு இடையிலான செலபரிட்டி கிரிக்கெட் மேட்ச் மும்பையில் நடக்க உள்ளது. அதில் பங்கேற்க உள்ளேன். அப்போது இந்தியில் நடிப்பது பற்றி பேசி முடிவு செய்வேன். இவ்வாறு பிரியாமணி கூறினார்.
Comments
Post a Comment