Saturday,19th of January 2013
சென்னை::சித்தார்த்துடன் காதலா? என்றதற்கு பதில் அளித்தார் சமந்தா. இது பற்றி அவர் கூறியதாவது: நான் தனியாக வாழ்கிறேனா, இல்லையா என்று கேட்டால் கண்டிப்பாக சொல்வேன், தனியாக வாழவில்லை. ‘சக நடிகர் சித்தார்த்தை காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். ‘ஜபர்தஸ்த் தெலுங்கு படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறோம். அவர் எனது நல்ல நண்பர். அதற்குமேல் எதுவும் இல்லை. ‘இருவரும் அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறதே..‘ என்கிறார்கள். வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது. என் காதல் வாழ்க்கை என்பது கண்டிப்பாக எனது சொந்த விஷயம். அதை வெளிப்படையாக பேச விரும்பவில்லை. சமீபகாலமாக எனது படங்களின் தொடர் வெற்றியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சீதம்மா வாகிட்லோ சிரிமலே செட்டு படம் தெலுங்கில் ஹிட்டாகி இருக்கிறது. ரொமன்டிக்கான வேடங்களில் தான் இப்போது நடித்து வருகிறேன். முன்னணி நடிகர்களுடன் தொடர்ச்சியாக நடிக்கிறேன். எந்த நடிகையின் வாய்ப்பையோ, கேரக்டர் அல்லது சம்பளத்தையோ பறிக்கும் எண்ணம் எனக்கில்லை. எனது வேலையில் மட்டுமே கவனமாக இருக்க விரும்புகிறேன். ‘காதலிப்பதால் சமையல் கற்கிறீர்களா? என்கிறார்கள். எனது ஓய்வு நேரங்களில் சமையல் பழகுகிறேன். ருசியான வத்தகுழம்பு வைக்க பழகிவிட்டேன். சீக்கிரமே இட்லி, தோசை சுடுவதற்கு பழகிவிடுவேன். என்னுடைய காதல் வாழ்க்கைக்கும் சமையலுக்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு சமந்தா கூறினார்.
Comments
Post a Comment