தமிழ் படங்களில் நடிக்க விடாமல் தடுக்க சதி: தமன்னா புகார்!!!

Tuesday,8th of January 2013
சென்னை::கேடி’ படம் மூலம் 2006-ல் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார் தமன்னா. தனுசுடன் ‘படிக்காதவன்’, சூர்யாவுடன் ‘அயன்’, கார்த்தியுடன் ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு தமிழ்பட வாய்ப்புகள் அவருக்கு கிட்டவில்லை. இதனால் தெலுங்குக்கு போனார். அங்கு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் அஜீத்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னணி நடிகையாக இருந்தும் ஏன் தமிழ்பட வாய்ப்புகள் வரவில்லை என்று தன்னாவிடம் கேட்டபோது ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-

நான் நடித்த ‘அயன்’, ‘படிக்காதவன்’, ‘சிறுத்தை’ போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடின. ஆனாலும் தமிழில் எனக்கு படங்கள் இல்லாமல் போனது. எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதன் பின்னணியில் சதி நடந்துள்ளது. என்னை நடிக்க வைக்கக்கூடாது என்று சிலர் தடுத்துள்ளனர். அவர்கள் யார் என்பதை நேரம் வரும்போது பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
1-11-12_findyour_INNER_468x60.gif

Comments