ஆர்யா தம்பியின் காதல் டூ கல்யாணம்!!!

Friday,18th of January 2013
சென்னை::ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த புத்தகம் பொங்கலுக்கு வெளியாகி தட்டுத் தடுமாறி ஓடிக் கொண்டிருக்கிறது. சத்யா நடிப்பில் வெளியான முதல் படம் புத்தகம். என்றாலும் அவர் நடித்த முதல் படம் இன்னும் பெட்டிக்குள்ளேயே உள்ளது.

மணிரத்னத்தின் உதவியாளர் மிலிந்த் இயக்கத்தில் சத்யா, திவ்யா ஸ்பந்தனா நடிக்க காதல் டூ கல்யாணம் என்ற படம் ஆரம்பிக்கப்பட்டது சிலருக்கேனும் நினைவிருக்கும். பல காரணங்களால் படம் இன்னும் பெட்டிக்குள்ளேயே உள்ளது. புத்தகம் வெளியான நிலையில் விரைவில் காதல் டூ கல்யாணமும் திரைக்கு வரும் என சத்யா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தமிழில் ஹீரோக்கள் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் சத்யாவை பிடித்துப் போட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முட்டி மோதுகிறார்கள். விரைவில் சத்யாவின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பு

Comments