Monday,21st of January 2013
சென்னை::ஹிந்திப் பட நடிகையும், நடன கலைஞருமான இஷா ஷெர்வானி, விக்ரம் ஜோடியாக "டேவிட்’ படத்தில் நடித்துள்ளார்.
மும்பையில் பிறந்து கேரளத்தில் செட்டில் ஆகிவிட்ட இஷா ஷெர்வானியிடம் பேசியபோது, ""15 வருடமாக கேரளத்தில்தான் வசிக்கிறேன். இருந்தாலும் இப்போதுதான் மலையாளப் படத்தில் நடிக்கப் போகிறேன். முறைப்படியான அனைத்து வகை நடனங்களையும் கற்றிருக்கிறேன். ஆனால் நடனம் தொடர்பான படத்துக்கு இதுவரை யாரும் அழைக்கவில்லை.
சினிமாவில் நடன கலைஞராக இல்லாமல் நடிகையாக என்னை நிரூபித்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். தென்னிந்திய படங்கள் மீது எப்போதுமே கவனம் உண்டு. குறிப்பாக தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். "டேவிட்’ படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி வேடம் ஏற்றிருக்கிறேன். தமிழில் நல்ல கதைகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன்’’ என்றார் இஷா ஷெர்வானி.
Comments
Post a Comment