Friday,25th of January 2013
சென்னை::விஸ்வரூபம் திரைப்படம் பல தடைகளைக் கடந்து ரிலீஸ் ஆகவேண்டிய நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான படம் என்ற வகையில் தமிழ்நாடு அரசு 15 நாட்கள் தடை விதித்துள்ளது.
ஆனால் மலேசியா ஒரு முஸ்லிம் நாடு. அங்கு இந்தப் படத்திற்கு சென்சார் அனுமதி அளித்து ரிலீசும் ஆகியுள்ளது.
இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பதிவில் இது பற்றி குறிப்பிடும்போது, "மலேசியாவில் விஸ்வரூபம் வினியோகஸ்தர்கள், மற்றும் ரசிகர்களிடம் பேசினேன். இது ஒரு முஸ்லிம் நாடு, அங்கு விஸ்வரூபம் படம் சென்சாரால் ஏற்கபட்டு படம் ரிலீஸ் ஆகியுள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
மேலும் விஸ்வரூபம் முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல என்றும் படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
மேலும் இந்த ஜனநாயக நாட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி சென்சார் போர்டுகள் விஸ்வரூபம் படத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளபோது எங்கிருந்து இந்தத் தடை வந்தது என்றும் கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
மேலும் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது அநியாயம், கலாச்சார பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். எழுத்து பேச்சுரிமைக்காக நிற்கிறோம், கமல் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.
Comments
Post a Comment