Saturday,12th of January 2013
சென்னை::திரிஷா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். விஷால் ஜோடியாக நடித்த சமர் படம் பொங்கலுக்கு வருகிறது. பூலோகம், என்றென்றும் புன்னகை, தெலுங்கில் ரம் படங்களில் நடிக்கிறார். திரிஷா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
நான் பத்து ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து இருக்கிறேன். இது பெரிய விஷயம். இத்தனை காலம் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருப்பது அதிர்ஷ்டம். நான் சினிமா வாய்ப்புகளை தேடிப்போக வில்லை. என்னைத் தேடித்தான் படங்கள் வருகிறது.
இயக்குனர்கள் என்னை மனதில் வைத்து கதை எழுதுகிறார்கள். உங்களை கேரக்டராக நினைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன். எனவே நீங்கள்தான் இதில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சினிமா போட்டி நிறைந்தது. ஆனாலும் எனக்குள்ள இடம் அப்படியே இருக்கிறது. நான் நிறைய கேரக்டரில் நடித்துவிட்டேன். அவற்றில் பல கேரக்டர்கள் என் நிஜ வாழ்க்கையை பிரதி பலிப்பதாக இருந்தன. உண்மையில் நான் எப்படி இருக்கிறேனோ அதே மாதிரி பாத்திரங்கள் இருந்தது.
அப்படிப்பட்ட படங்களில் நடிக்கவில்லை. நானாக வந்தேன். இதுவரை என் முழு திறமையையும் காட்டுகிற மாதிரி படங்கள் அமையவில்லை. விஷால், ஜெயம் ரவியுடன் நடித்துள்ளேன் இரு படங்களும் தொடர்ந்து வர உள்ளன.
இவ்வாறு திரிஷா கூறினார்.
Comments
Post a Comment