ம‌ரியான்... தனுஷ் நடி‌ப்பு கு‌றி‌த்து பா‌ர்வ‌தி!!!

Friday,18th of January 2013
சென்னை::பார்வதியை நினைவிருக்கிறதா? சசியின் பூ படத்தில் ஸ்ரீகாந்தை உருகி உருகி காதலித்தவர்...?

சசி படத்தில் நடித்ததாலா தெ‌ரியவில்லை, சசி ஐந்து வருடங்களுக்கு ஒரு படம் எடுப்பது போல பார்வதிக்கும் பட வாய்ப்பு அத்தி பூத்தது போல்தான் கிடைத்திருக்கிறது. பரத்பாலா இயக்கத்தில் தனுஷுடன் ம‌ரியான் படத்தில் நடித்து வருகிறார்.

தென் ஆப்பி‌ரிக்காவில் ம‌ரியானின் பாடல் காட்சியையும் வேறு சில வசனக் காட்சிகளையும் சமீபத்தில் படமாக்கினர். அதுபற்றிய பார்வதியின் கமெண்ட்தான் இப்போதைக்கு ஹாட் டாபிக்.

வடிவேலு சொல்வாரே, அப்படியே ஷா....க் ஆயிட்டேன் என்று. அதுபோலதான் இருக்கிறது பார்வதியின் ஸ்டேட்மெண்டும். தென் ஆப்பி‌ரிக்க கடற்கரையில் கொதிக்கிற கடற்கரை மணலில் கஷ்டப்பட்டு தனுஷ் நடித்ததைப் பார்த்து அப்படியே கலங்கிட்டேன் என்று தெ‌ரிவித்திருக்கிறார் பார்வதி. அவர் கலங்குற அளவுக்கு தனுஷ் எதை கழற்றினார் என்பதை படம் பார்த்துதான் தெ‌ரிந்து கொள்ள வேண்டும்.

ம‌ரியானில் எனக்கு வித்தியாசமான வேடம், இந்தப் படம் என்னுடைய கே‌ரிய‌ரில் திருப்புமுனையாக இருக்கும் எனவும் பார்வதி பூஸ்ட் செய்தியொன்றையும் தெ‌ரிவித்திருக்கிறார்.

Comments