விஸ்வரூபம் படம் டி.டி எச்சில் வெளியிடுவது உறுதி : வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கபடும்- கமலஹாசன்!!!
Wednesday, 9th of January 2013
சென்னை::விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து கமலஹாசன் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஸ்வரூபம் திரைப்படம் டி.டிஎச்சில் வெளியிடுவது உறுதி. டிடிஎச்சில்படம் வெளியிடுவதால் யாருக்கும் பாதிப்பில்லை.டிடிஎச்சில் படத்தை வெளியிடுவது எனது புதிய வழி இனிமேல் அது பொதுவழியாக மாறும்.டிசி. நியாயமான வியாபாரம் செய்துள்ளேன். இதனால் திரையரங்குகளுகு பாதிப்பு வராது.எச்சில் விஸ்வரூபம் படத்தை வீடுகளுக்கு மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் உணவகங்களுக்கும், விடுதிகளுக்கும் ஒளிபரப்ப கூடாது.விஸ்பரூபம வெளியாகும் தேதியை அறிவிக்கும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது.விஸ்வரூபம் வெளியாவது குறித்து தவறான தகவல்கள் பரப்பபடுகிறது. படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதால் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும், அகந்தையும் எனக்கு உள்ளது. எனவே படம் ரிலீஸ் தேதியை நான்தான் அறிவிப்பேன்.யார் யாரோ அறிவித்து வருகின்றனர். .யாருடனும் எனக்கு மோதல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்
Comments
Post a Comment