ஐஸ்வர்யா அர்ஜூனின் நடிப்பை புகழும் விஷால்!!!

Friday,18th of January 2013
சென்னை::தனது மகள் ஐஸ்வர்யாவை பூபதிபாண்டியன் இயக்கும் பட்டத்து யானை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகம் செய்துள்ளார் அர்ஜூன். அவரை மீடியாக்களுக்கு அறிமுகம் செய்தபோதே, பாலிவுட்டுல கேட்டாக, டோலிவுட்டுல கேட்டாக நான்தான் தமிழ் எனக்கு வாழ்வு கொடுத்த பீல்டாச்சேன்னு இங்க அறிமுகம் செய்றேன் என்று பில்டப் கொடுத்தார் ஆக்சன் கிங். அதோடு, என் மகளை சும்மா கத்துக்குட்டியாக களமிறக்கல. என்னதான் மீன்குஞ்சியாட்டம் இருந்தாலும் முறையான நடிப்பு பயிற்சி கொடுத்துதான் இறக்குறேன் என்றும் சொன்னார்.

ஆக, இப்போது பட்டத்துயானை படப்பிடிப்பும் தொடங்கியாச்சு. முதல் காட்சியை செண்டிமென்டாக ஸ்ரீரங்கம் கோயிலை ஐஸ்வர்யா சுற்றி வருவது போல் படமாக்கியவர்கள், பின்னர் விஷால், ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட சில ரொமான்ஸ் காட்சிகளையும் படமாக்கியுள்ளனர். அப்போது, நடிப்பு என்பதையே மறந்து நிஜ காதலி போலவே ஐஸ்வர்யா நடித்ததாக சொல்லும் விஷால், இதுவரை எத்தனையோ நடிகைகளுடன் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் ஐஸ்வர்யா மாதிரி யாருமே நடித்ததில்லை. அப்படியொரு உருக்கம். எனக்கே அவருடன் நடித்த பிறகு காதல் மீது ஒரு மரியாதை ஏற்பட்டு விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் என்று சினிமா வட்டாரங்களில் டமாரமடித்து வருகிறார் விஷால்.

Comments