Friday,18th of January 2013
சென்னை::முன்னணி ஹீரோ கால்ஷீட் கிடைத்தால் படம் தயாரித்து இயக்குவேன். அதில் நடிக்க மாட்டேன் என்றார் சந்தானம்.இயக்குனர் ராமநாராயணனுடன் இணைந்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை தயாரித்திருக்கிறார் சந்தானம். இது பற்றி அவர் கூறியதாவது:
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் 2ம்பாகம் தயாரிப்பதாகவும், அதில் பவர்ஸ்டார் சீனிவாசனை நடிக்க கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அப்படி எதுவும் இல்லை. இந்த ஆண்டு எனக்கு நல்லபடியாக தொடங்கி இருக்கிறது. Ôகண்ணா லட்டு...Õ படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது. அதற்கான ரெஸ்பான்ஸும் நன்றாக இருக்கிறது. ஒரு நடிகனாக கைநிறைய 10 படங்களுடன் நடித்து வருகிறேன். விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு உள்ளிட்டவர்களுடன் நடிக்கிறேன்.
கண்ணா லட்டு படத்தில் உடன் நடித்தவர்களுக்கு சமவாய்ப்பு கொடுத்தது பற்றி கேட்கிறார்கள். உண்மைதான். ஒரு தயாரிப்பாளராக அவர்களுடைய சுதந்திரத்தை நான் பறிக்க விரும்பவில்லை. படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் சக நடிகர்களும் இருப்பார்கள். நான் எனது கதாபாத்திரத்துக்கென கூடுதலாக எந்த காட்சிகளையும் அமைத்துக்கொள்ளவில்லை.
சொல்லப்போனால் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறேன். இனி நான் தயாரிக்கும் படங்களிலும் இப்படித்தான் நடிப்பேன். 3 படங்கள் தயாரிப்பது பற்றி பேச்சு நடந்து வருகிறது. 2 படங்களில் மற்ற நடிகர்களின் பாத்திரங்களுக்கு சமமாக என் வேடமும் இருக்கும். 3வது படத்தில் நான் பிரதான வேடத்தில் நடிக்க உள்ளேன். எல்லா படங்களுமே குடும்பத்துடன் பார்க்கக்கூடடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும். ‘படம் இயக்குவீர்களா? என்கிறார்கள். என்னிடம் முன்னணி நடிருக்கான ஸ்கிரிப்ட் இருக்கிறது. அவர்களின் கால்ஷீட் கிடைத்தால் இயக்குவேன். அதில் நான் நடிக்க மாட்டேன்.
Comments
Post a Comment