Friday,11th of January 2013
சென்னை::மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய படங்களில் நடித்தவர் ஹன்சிகா மொத்வானி. தற்போது, ‘சேட்டை’, ‘சிங்கம் 2’, ‘வாலு’, ‘பிரியாணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோபர்ஸ், இந்தியாவின் முக்கியமான 100 பிரபலங்கள் பட்டியலில், இளவயது பிரபலங்கள் பட்டியலின் முதற்கட்ட பரிசீலனையில் ஒருவராக ஹன்சிகாவையும் தேர்வு செய்துள்ளது.
இந்த அறிவிப்பை கேட்டதும் ஹன்சிகா ரொம்பவுமே உற்சாகமானார். சந்தோஷத்தில் அவர் கூறும்போது, என்னால் இதை நம்பவே முடியவில்லை.
இதற்காக என்னுடைய ரசிகர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சக நடிக, நடிகையர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.
Comments
Post a Comment