தமன்னா எனக்கு மிகவும் பிடித்த தோழி: நடிகை இலியானா!!!

Wednesday, 9th of January 2013

சென்னை::தமன்னா எனக்கு மிகவும் பிடித்த தோழி என்று நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மும்பைக்குச் சென்றுவிட்டாலும் தென் மாநிலங்களில் உள்ள நட்சத்திர நண்பர்களை மறக்கவில்லை. அவர்களுடன் தொடர்பில்தான் இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த தோழி தமன்னா. தற்போது அவரும் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருவது உதவியாக உள்ளது. மும்பைக்கு சென்றாலும் பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்வதில்லை. இதனை பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன். வீட்டில் தான் பொழுதை கழித்து வருகிறேன் என்று இலியானா கூறினார்.

தெலுங்கில் முன்னணி நடிகையான இலியானா அண்மையில், தமிழில் நண்பன் எனும் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து இந்தியில் அவர் நடித்த பர்பி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் இலியானாவுக்கு இந்தியில் வாய்ப்பு குவியத் துவங்கிவிட்டது.

Comments