குழந்தையை பிரியாத ஐஸ்வர்யா ராய்: அபிஷேக் பச்சன்!!!

Wednesday,16th of January 2013
சென்னை::ஐஸ்வர்யாராய் குழந்தையை ஒருநாள்கூட பிரிந்து இருப்பது இல்லை என்றும், தினமும் இரண்டு மணிநேரம் குழந்தைக்காகவே ஒதுக்கி விளையாடுகிறார் என்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் கூறினார்.

அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் திருமணம் கடந்த 2007-ல் நடந்தது. இவர்களுக்கு 2011 நவம்பர் 16-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆரத்யா என பெயரிட்டனர்.

கடந்த நவம்பரில் குழந்தையின் முதல் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடினார். குழந்தையுடனேயே எப்போதும் இருக்க ஐஸ்வர்யா ராய் விரும்புகிறாராம். ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் குழந்தை ஞாபகமாகவே இருக்கிறாராம்.

தினமும் மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணிவரை குழந்தையுடன் விளையாட ஒதுக்குகிறார். அந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் ஒப்புக்கொள்வது இல்லை. இதுகுறித்து அபிஷேக் பச்சன் கூறும்போது குழந்தை மீதான ஐஸ்வர்யாராயின் பாசம் பிரமிக்க வைக்கிறது.

மாலையில் இரண்டு மணி நேரம் குழந்தையுடன் விளையாடுவதை கட்டாயமாக்கி கொண்டு உள்ளார். அந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் போவது இல்லை. நானும் குழந்தையோடு விளையாட பிரியப்படுகிறேன். வேலைகள் இருப்பதால் அடிக்கடி என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. வெளியே போய் விடுகிறேன். ஆனால் ஐஸ்வர்யாராய் அப்படி இல்லை. குழந்தைதான் அவருக்கு முக்கியம் என்றார்.
1-11-12_findyour_INNER_468x60.gif

Comments