Monday,28th of January 2013
சென்னை::ஸ்ருதிஹாசன் 'கப்பார் சிங்' படத்துக்கு பின் தெலுங்கில் பிசியான நடிகையாகியுள்ளார். தமிழில் '3' படத்துக்கு பின் அவருக்கு படங்கள் இல்லை. ஸ்ருதிஹாசன் இன்று தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ரசிகர்கள் திருப்த்தியடைந்த படங்களில் நடித்தேன் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் கேரக்டரில் நடிப்பேன். தற்போது ஐந்து படங்கள் என் கைவசம் உள்ளன. ஓய்வே இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.
ரவிதேஜாவுடன் ‘பலுபு’ ராம்சரனுடன் ‘யவடு’ மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இந்தியில் பிரபுதேவா இயக்கும் படமொன்றிலும் நடிக்கிறேன். சினிமாவில் அறிமுகமானபோது எனக்கு பிடித்த மாதிரி என்னை அழகுபடுத்தினேன். ரசிகர்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என யோசித்து என்னை அழகுபடுத்துகிறேன்.
ஒவ்வொரு படத்திலும் புது விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். சினிமாவும் இசையும் எனது இரு கண்கள். எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் இசையமைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment