Monday,21st of January 2013
சென்னை::சேது படம் வெளியான போது பாலாவும், பாலுமகேந்திராவும் மனக்கசப்பில் இருந்தனர். சேது வெளியாகி வருடங்கள் கழிந்த பிறகே அதனை பாலுமகேந்திரா பார்த்ததாக தகவல். பிதாமகனிலிருந்து முதல் ஷோ பாலுமகேந்திராவுக்குதான்.
பரதேசியையும் தனது குருநாதருக்காக சென்னை ஃபோர் பிரேம்ஸில் திரையிட்டார் பாலா. படம் பார்த்த பின் தனது சாலிக்கிராமம் அலுவலகத்தில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பாலாவிடம் படம் குறித்து பேசியிருக்கிறார் பாலுமகேந்திரா. பாலா இதுவரை இயக்கிய படங்களில் பரதேசிதான் பெஸ்ட் என்பது பாலுமகேந்திராவின் எண்ணம்.
விரைவில் பாலுமகேந்திராவின் எண்ணங்கள் பரவச பாராட்டுகளாக வெளிவரலாம்
Comments
Post a Comment