Friday,25th of January 2013
சென்னை::கணவனை தேடும் வேடம் ஏற்று நடிக்கிறார் நயன்தாரா. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. தமிழில் அஜீத், ஆர்யா படங்களில் ஜோடியாக நடித்து வருகிறார். தவிர தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார். இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் ‘கஹானி’. கணவனை தேடும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு பாராட்டு பெற்றுத்தந்தது. அந்த படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் நடிக்க அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டவர்களிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால், யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது இந்த வேடத்தை ஏற்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
படத்தை சேகர் கம்லா இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘கஹானி’ படம் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கிறார். இந்தியில் இப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த படத்தின் கரு மட்டுமே எடுத்துக்கொண்டு திரைக்கதையில் பெரிய மாற்றங்களுடன் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் த்ரிலும் இருக்கும் என்றார். நயன்தாரா, பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். அதெல்லாமே கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகவே அமைந்தன. முதல்முறையாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடமாக ‘கஹானி’ ரீமேக் அவருக்கு அமைந்திருக்கிறது. இதற்காக நீண்ட நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி நடிக்க முடிவு செய்திருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment