எஸ்.ஜே.சூர்யா படத்தில் இருந்து விலகிய பிரகாஷ்ராஜ்!!!

Thursday,10th of January 2013
சென்னை::இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி, ஹீரோவாக நடிக்கும் படம் 'இசை'. இசையமைப்பாளர்களுக்கிடையே உள்ள மோதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா இசையும் அமைக்கிறார்.

இப்படத்திற்காக இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ள எஸ்.ஜே.சூர்யா, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறுகளை இப்படத்தில் காட்சிகளாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், இளையராஜா வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடிப்பதாக இருந்தது. ஆனால், திரைக்கதையில் இளையராஜாவை அவமதிப்பதுபோல் இருப்பதால், தன்னால் நடிக்க முடியாது என்று கூறி பிரகாஷ்ராஜ் கூறிவிட்டாராம்.

Comments