ஸ்ருதியை வைத்து இயக்க கதை ரெடி பண்ணியிருக்கிறேன்: விஷால்!!!

Monday,21st of January 2013
சென்னை::சமர்’ படத்தின் வெற்றியால் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார் விஷால். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹிட் படத்தை கொடுத்த மகிழ்ச்சி அவருடைய முகத்தில் தெரிகிறது. அதிரடி ஆக்ஷனில் வெளுத்து கட்டும் இவருக்கு இயக்குனராகும் ஆசையும் ஒளிந்து கிடக்கிறது.

இதுகுறித்து அவரே கூறும்போது, ஒரு படத்தை சொந்தமாக இயக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் நீண்ட காலமாகவே உள்ளது. அதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். ஆனால் கதை ரெடியாக உள்ளது. இந்த கதை ஸ்ருதிஹாசனுக்கு பொருத்தமாக இருக்கும். அது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.

ஒவ்வொரு உதவி இயக்குனரும் கதை ரெடி பண்ணும்போதே, இதில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை மனதில் வைத்து ரெடி பண்ணுவது வழக்கம். அதுபோலதான் நானும் இந்த கதையை ரெடி செய்து வைத்திருக்கிறேன் என்றார்.

ஒரு போனஸ் செய்தியாக, ஆர்யா, ஜீவாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறேன். வெங்கட்பிரபுதான் அந்த படத்தை இயக்குகிறார். ஆனால், அந்த படம் எப்போது தயாராகும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. வெங்கட் பிரபுதான் இதை முடிவு செய்யவேண்டும் என்று கூறினார் விஷால்.

Comments