Friday,11th of January 2013
சென்னை::விஜய், மோகன்லால் இணைகிறார்கள். சில வாரங்கள் முன்புவரை வதந்தியாக இருந்த இந்த செய்தி இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நேசன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார், ஆர்.பி.சௌத்ரி படத்தை தயாரிக்கிறார் என சில மாதங்கள் முன்பு பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
ஏல்.விஜய் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்குப் பிறகு நேசனின் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. முன்பே கூறியபடி ஆர்.பி.சௌத்ரி இந்தப் படத்தை தயாரிக்கிறார். இசை டி.இமான்.
ஜில்லா என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என தெரிகிறது.
படத்தின் முக்கியமான விஷயம் விஜய்யுடன் மோகன்லால் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உண்டு. விஜய், மோகன்லால் காம்பினேஷன் தமிழகத்தைத் தாண்டி கேரளாவிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
Comments
Post a Comment