Tuesday,8th of January 2013
சென்னை::பொங்கல் தினத்தில் 5 படங்கள் ரிலீஸ் ஆகிறது. வரும் 14ம் தேதி பொங்கல் திருநாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்தாக 4 படங்கள் ரிலீஸ் ஆகிறது. டிடிஎச்ல் விஸ்வரூபம் ஒளிப்பரப்பாவதுடன் மறுநாள் திரை அரங்குகளிலும் பொங்கலையொட்டி 11ம் தேதி ரிலீஸ் செய்கிறார் கமல். பெரும்பாலான தியேட்டர் அதிபர்கள் படத்தை ரிலீஸ் செய்யப்போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் சென்னையில் சத்யம், தேவி, தேவிகலா, எஸ்கேப், ஐநாக்ஸ், பைலட், எம்எம்தியேட்டர் சுற்றுவட்டார பகுதிகள் உள்பட 16 தியேட்டர்களில் படம் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முன்பதிவும் தொடங்குகிறது. இதுதவிர வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் ஆக உள்ளது. சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா நடித்துள்ள படம் ‘அலெக்ஸ் பாண்டியன். 450 தியேட்டர்களில் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. இதற்கான முன்பதிவும் தொடங்கி இருக்கிறது. சந்தானம் நடித்துள்ள ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘ ரிலீஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.மணிகண்டன் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இப்படம் தான் இயக்கிய ‘இன்றுபோய் நாளை வா‘ படத்தை காப்பி அடித்து எடுத்திருப்பதாக கே.பாக்யராஜ் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருப்பதுடன் ரூ. 2 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாகவும் கூறி இருக்கிறார். விஷால் நடிக்க திரு இயக்கியுள்ள படம் ‘சமர் பொங்கல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘இப்படத்துக்காக உபகரணங்களை பயன்படுத்திய அளவில் ரூ. 1 கோடியே 20 லட்சம் பாக்கிதரவேண்டி உள்ளதால் பணத்தை தராமல் படம் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும்‘ என்று ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்ய கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் ஆர்யா தம்பி சத்யா அறிமுகமாகும் ‘புத்தகம்‘ மற்றும் ‘விஜயநகரம்‘ படங்களும் ரிலீஸ் ஆகிறது. அறிவிக்கப்பட்டுள்ள படங்களில் சில படங்கள் பிரச்னைகளில் சிக்கி இருப்பதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments
Post a Comment