டப்பிங் பேச மறுத்த பிரகாஷ்ரா‌ஜ்!!!

Wednesday, 9th of January 2013
சென்னை::தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி அவ்வப்போது மலையாளம் என்று கலந்தடிக்கிற பிரகாஷ்ரா‌ஜின் டெடிகேஷன் உலகப் பிரசித்தம். கமிட்மெண்ட்கள் காரணமாக எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்திலிருந்து விலகினார். உடனே அது இளையராஜாவுக்கு எதிரான படம், அதனால்தான் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கவில்லை என இறக்கை கட்டி பறக்கவிட்டார்கள்.

சல்மான்கானின் தபாங் 2-க்கு பிரகாஷ்ரா‌ஜ் காட்டிய எதிர்ப்பு படம் வெளிவந்து பல வாரங்கள் ஆன நிலையில் பஞ்சாயத்துக்கு வந்துள்ளது.

தபாங் படத்தில் சோனு சூட் வில்லனாக நடித்திருந்தார். அதுவரை சீண்டப்படாதவராக இருந்தவரை தபாங் ஒரே இரவில் பெ‌ரிய நட்சத்திரமாக்கியது. தற்போது கமாண்டோ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேற்படி சமாச்சாரம் காரணமாக தபாங் 2-வில் யார் வில்லன் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வான்டட், சிங்கம் படங்களில் பட்டையை கிளப்பிய பிரகாஷ்ராஜை மெயின் வில்லனாக தேர்வு செய்து நடிக்க வைத்தார்கள். படத்தை இயக்கியவர் சல்மானின் சகோதரர் அர்பாஸ் கான்.

இவ‌ரின் இயக்க‌ம் ஆரம்பித்திலிருந்தே பிரகாஷ்ராஜுக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது. தவிர அவர் சம்பந்தப்பட்ட கல காட்சிகளை எடிட் செய்திருக்கிறார். டப்பிங்கில் இதனை கவனித்தவர் அதன் பிறகு டப்பிங் தியேட்டர் பக்கமே செல்லவில்லை. ஃபோன், இ-மெயில் என பலவகையில் தொடர்பு கொண்டும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்திருக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ். பிறகு பிரகாஷ்ரா‌ஜின் வாய்ஸ் இல்லாமலே டப்பிங்கை முடித்திருக்கிறார்கள்.

ரொம்ப ரோசக்காரர்யா...

Comments