Monday,14th of January 2013
சென்னை::கால்ஷீட் கேட்டு வரும் கோலிவுட் தயாரிப்புகளை காஜல் ஹீரோயின் போட்டுத் தாக்குறாராம்... இந்த தாக்குதல் ‘மணி மேட்டருங்கிறதால யாரும் புகார் தர முடியலாயம். கால்ஷீட் வேணும்னு கேட்டா ஒன் சி தாங்கன்னு கறாரா சொல்றதோட மத்த செலவெல்லாம் தனின்னு சொல்றாராம். இதுல கலங்கிப்போற தயாரிப்புங்க அபவுட்டர்ன் ஸ்டெப் போடுறாங்களாம்... சம்பளம் ரொம்ப உசத்திட்டீங்களேன்னு யாராவது நடிகைகிட்ட கேட்டா, ஒரு காலத்துல என்னை ராசி இல்லாதவன்னு சென்டிமென்ட் பாத்து வேணாம்னு ஒதுக்க¤னவங்ககிட்டதான் கேக்கறேன். இது தப்பில்லேன்னு வேலுநாயக்கர் பாணியில பஞ்ச் அடிக்கிறாராம்...
கஜினி படம் தயாரிச்சவரு ரொம்ப நாளைக்கப்புறம் மறுபடியும் தயாரிப்புல குதிச்சிருக்காராம்... வருஷ கணக்குல பெண்டிங்ல இருந்த லவ் பட ஹீரோ நடிக்க¤ற படத்துக்கான ஷூட்டிங்கை ஒருவழியா முடிச்சிட்டாராம். வழக்கமா ஒயிட் அண்ட் ஒயிட்ல வர்ற தயாரிப்பு சென்டிமென்ட் காரணமா அந்த ஸ்டைலுக்கு முழுக்கு போட்டுட்டாராம். ராசி, ஜோசியம்பாத்து அதுக்கேத்த மாதிரி கலர் கலரா டிரஸ்போட ஆரம்பிச்சிட்டாராம்...
சேவை வரிக்கு எதிரா கோலிவுட்காரங்க உண்ணாவிரத போராட்டம் நடத்தினாங்க. இதுல பிரகாச வில்லனும் கலந்துகிட்டாரு. தன்னோட ஆத்ம நண்பரான தாடிக்கார டான்ஸ் மாஸ்டரையும் போராட்டத்துல கலந்துக்க வற்புறுத்தினாராம்... Ôஇப்போ நான் பாலிவுட் டைரக்டர். சென்னை பக்கம் திரும்ப கூப்பிடாதீங்கÕன்னு டான்சரு தெனாவட்டா சொல்லிட்டாராம்...
வேல்டு ஹீரோ, ரூப பட ரிலீஸ் தேதிய பொங்கலுக்கப்புறம் 10 நாள் தள்ளி அனவுன்ஸ் பண்ணியிருக்காரு. இது ஆடியன்ஸுக்கு இனிப்பா இருந்தாலும் பெல் இயக்கம், காட்டன் வீர இயக்கத்துக்கு கசப்பா இருக்காம். பொங்கல் ரிலீஸ்லயிருந்து தங்களோட படங்கள தள்ளி ரிலீஸ் பண்ண நெனச்சிருந்த இயக்குனருங்க இப்ப வேற தேதி பாக்க வேண்டி இருக்காம். அடுத்த மாசம் லவ்வர்ஸ் டேக்கு பட ரிலீஸ தள்ளி போறதுபத்தி ரெண்டு தரப்புலேயும் பேசிக்கிட்டிருக்காங்களாம்...
பஞ்ச் நடிகரோட கன் படம் நூறு கோடி கலெக்ஷன் பண்ணிருச்சின்னு அந்த பட தயாரிப்பு அலப்பறை பண்றாராம்... இதை கேட்டு வினியோகஸ்தருங்க தலையில அடிச்சிக்கிறாங்களாம்... பஞ்ச் நடிகரை வச்சி லாபம் பார்த்த ருசி, திரும்ப அவரோட கால்ஷீட்டுக்காக தயாரிப்பை காக்க வச்சிருக்காம். அதுக்குதான் இப்படி பில்டப் பண்றாராம்...
ஆனந்த இயக்கத்தை அட்வான்ஸ் கொடுத்து மடக்க பார்த்த தயாரிப்புங்க திடீர்னு ஜகா வாங்கிட்டாங்களாம். செவன்த் சென்ஸ் ஹீரோவோட படம் ரிலீசுக்கு முன்னாடி வரை ஆனந்த இயக்கத்தை அந்த தயாரிப்புங்க சுத்தி சுத்தி வந்தாங்களாம்... இப்போ யார் வருவாருன்னு வழி மேல் விழி வச்சி இயக்கம் காத்து கிடக்கிறாராம்...
மிரட்ற படத்துல நடிச்ச வினயமான ஹீரோ சம்பளத்த உசத்திட்டாராம்... இதனால அவர தேடிபோறதா இருந்த தயாரிப்புங்க அப்படியே ஸ்டாப் ஆயிட்டாங்களாம். இதுபத்தி கேள்விப்பட்ட நட்புங்க சிலர் இந்த மேட்டர ஹீரோ காதுல ஓதுனாங்களாம். இத கேட்டு உஷாரான ஹீரோ சம்பளத்த குறைச்சி இருக்க¤றதா தெரிஞ்சவங்க மூலமா மேட்டர கசிய விடுறாராம்...
கிரிக்கெட் வீரர்களோட தொடர்புபடுத்தி வர்ற கிசுகிசுக்கள் ஹீரோயின்களுக்கு ரொம்பவே பிடிக்குதாம்... எவ்வளவு கிசுகிசு வந்தாலும் லட்சுமிகர நடிகை கண்டுக¤றதில்லையாம். இப்படியொரு கிசுகிசுக்காக சான்டல்வுட் ஹீரோயின்களும் ரொம்பவே ஆசைப்படுறாங்களாம். திவ்யமான ஹீரோயினுக்கு இந்த வருஷ தொடக்கமே குஷியா அமைஞ்சிடுச்சாம். ராகுலான வீரரோட அவர் நடிச்ச ஒரு ஆட் படம்தான் இந்த குஷிக்கு காரணமாம். தன்னை பத்தி சர்ச்சை செய்தி வந்தா உர்ராகுற நடிகை, வீரரோட சம்பந்தப்படுத்தி கிசு கிசு வந்தா அத கண்டுக்க மாட்டேங்கிறாராம்...
பாலிவுட்போன இலி நடிகையை நைட்பார்ட்டில கலந்துக்கச்சொல்லி நெறயபேர் கூப்பிடுறாங்களாம்... எதுக்கும் போகாம எஸ்கேப் ஆயிடுறாராம். தன்னோட நெருக்கமான ஒரு தோழி கெடச்சா இந்தமாதிரி பார்ட்டிக்கெல்லாம் தைரியமா போகலாம்னு நெனச்சிட்டிருந்தவருக்கு தமன நடிகை கைகொடுக்க முடிவு பண்ணிருக்காராம். சவுத்ல நடிச்சப்ப ரெண்டுபேரும் திக் பிரண்டா இருந்தாங்களாம். இப்ப ரெண்டுபேருமே பாலிவுட்ல கவனம் செலுத்துறதால ஒருத்தருக்குகொருத்தர் உதவியா இருக்க முடிவு பண்ணிஇருக்காங்களாம்...
Comments
Post a Comment