Wednesday, 9th of January 2013
சென்னை::சைக்கிள் கம்பெனி‘ என்ற படத்தில் இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். இதுபற்றி இயக்குனர் மேலாநல்லூர் சீனிவாசன் கூறியதாவது:
மலையடிவார கிராமம் ஒன்றில் பெரிய பங்காளி, சின்ன பங்காளி என்ற இரண்டு பண்ணையார்கள் வைத்ததுதான் சட்டம். ஊரில் யாரும் காதலித்து திருமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. மீறி யாராவது காதலித்தால் அந்த ஜோடியை பஞ்சாயத்து முன் நிறுத்தி வேறு பெண், வாலிபனுடன் திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். இந்நிலையில் பண்ணையாரின் மகள்கள் ஊரில் சைக்கிள் கம்பெனி வைத்திருக்கும் இளைஞர்களை காதலிக்கின்றனர். இது பிரச்னையாகிறது.
இந்நிலையில் ஊர்மக்கள் ஒரு ஆபத்தில் சிக்குகிறார்கள். அவர்களை இளைஞர்கள் காப்பாற்றுகின்றனர். இந்நிலையில் இளைஞர்களின் காதலை ஊர்மக்கள் ஆதரிக்கிறார்களா என்பது கிளைமாக்ஸ். காதல் கதையென்றாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ரீத் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை லக்ஷ்மிகா அறிமுகமாகிறார். மற்றொரு ஜோடியாக மஞ்சுநாத், ரேகாஸ்ரீ நடிக்கின்றனர். இவர்களுடன் ஷியாம் பிரசாத், செல்லத்துரை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மணிவாசகன் ஒளிப்பதிவு. ஜே.கே.செல்வாஹ் இசை. ஷியாம் பிரசாத் ரெட்டி, சி.சி.செந்தில் தயாரிப்பு. இவ்வாறு இயக்குனர் கூறினார்.
Comments
Post a Comment