ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதுமானது: அஜீத்!!!

Friday,18th of January 2013
சென்னை::விருதுகளை வாங்கி குவிப்பதில் முனைப்பாக இல்லை என்று நடிகர் அஜீத் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 8 மாதத்திற்குள் ஒரு படத்தை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறேன். இந்த திட்டமிடுதலை மங்காத்தா படத்திலிருந்தே பின்பற்றுகிறேன். விருதுகளை வாங்கி குவிப்பதில் முனைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதுமானது என்றார்.

தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வரும் அஜீத் இந்தப் படத்தையடுத்து சிறுத்தை இயக்குனர் சிவா படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments