Saturday,19th of January 2013
சென்னை::விஜய் நடிக்கும் ‘தலைவா’ அரசியல் படம் இல்லை. படத்தின் தலைப்புக்கு காரணம் விஜய்யின் இமேஜ் மற்றும் கதையின் தன்மைக்கு ஏற்ப தேர்வானது என்கிறார் பட தயாரிப்பாளர் சுனில் சந்திரபிரகாஷ் ஜெயின்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் முக்கிய காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டது. அடுத்தகட்டமாக சென்னையில் முக்கிய காட்சிகளை படமாக்குகிறார். விக்ரமுடன் எமியும் நடிக்க உள்ளார். இதையடுத்து வெளிநாடுகளில் படமாக்கவுள்ள பாடல் காட்சிகளுக்காக லொகேஷன் தேர்வுக்காக புறப்பட்டு செல்கிறார் ஷங்கர்.
‘கம்மத் அண்ட் கம்மத்’ மலையாள படத்தில் நடிக்கும் நரேன் சண்டை காட்சியில் நடித்தபோது காலில் கத்தி குத்தியதில் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக ஓய்வில் இருந்த அவர் குணமாகி மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.
சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ப்ரியதர்ஷன். இதற்கு ‘ரன்கிரிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஜாக்கி பாக்னானியுடன் ப்ரியா ஆனந்த் நடிக்க உள்ளார்.
மலையாள நடிகை ஜெயபாரதியின் மகன் ஜே.கிரிஷ் மல்லுவுட்டில் மம்முட்டி நடிக்கும் ‘லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
Comments
Post a Comment