Wednesday,16th of January 2013
சென்னை::மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் பழைய நடிகர் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது.
விழாவில் கவுதமை மேடைக்கு அழைத்து வந்து கார்த்திக் அறிமுகபடுத்தினார். துளசியை மணிரத்னம் அறிமுகம் செய்தார். மணிரத்னம் பேசும்போது கவுதமை நாயகனாக தேர்வு செய்த பிறகு நாயகி தேடல் நடந்தது. நிறைய பேரை பார்த்தும் திருப்தி இல்லை. கார்த்திக், ராதாவை “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் அறிமுகம் செய்தவர் பாரதிராஜா. எனவே ராதா மகளை நடிக்க வைக்கலாம் என்று துளசியை தேர்வு செய்தேன் என்றார்.
பின்னர் துளசியிடம் கேமரா முன்னால் பயமின்றி எப்படி உங்களால் நடிக்க முடிந்தது என்று மணிரத்னம் கேட்டார். அதற்கு பதில் அளித்த துளசி, என் தாய் ராதா, சகோதரி கார்த்திகா சினிமாவில் உள்ளனர். நடிப்பு என் ரத்தத்தோடு கலந்தது. அதனால் காமிராவுக்கு பயப்படவில்லை என்றார்.
Comments
Post a Comment