Monday,14th of January 2013
சென்னை::சந்தானம், சேது, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் மூன்று ஹீரோக்களாக நடித்துள்ள படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படம் மூன்று பேர் ஒரு பெண்ணை காதலிக்கும் கதையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே பாக்யராஜ் முன்பு இயக்கிய இன்று போய் நாளைவா படத்தின் கதை அடிப்படையில் இந்த கதையையும் உருவாக்கியிருக்கிறார்களாம். ஆனால் இதற்கான ஒப்புதலை முறையாக பாக்யராஜிடம் பெறவில்லையாம. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி வரை அடக்கிவாசித்த பாக்யராஜ். தேதி அறிவித்ததும் இதுதான் எதிரிகளை தாக்க சரியான சந்தர்ப்பம் என்று படத்தின் மீது மோசடி புகார் அளித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத லட்டு படக்குழு கடும் அதிர்ச்சியடைந்தது. இது வேறு மாதிரியான கதை என்றும் வாக்குவாதம் செய்தது. ஆனால், அதற்கு முன்பு இன்றுபோய் நாளை படத்தின் தழுவல்தான் இந்த படம் என்று அப்படக்குழுவினர் சிலர் பேசியதை வீடியோ ஆதாரமாக வைத்து பாக்யராஜ் பேசியதால் அவர்களால் தப்பிக்க இயலவில்லை. அதனால் வாய்விட்டு வம்பில் மாட்டிக்கொண்டேமே என்று தடுமாறிய லட்டு படக்குழு, அதன்பிறகு முருங்கைக்காய் நடிகரை சமாளிக்க பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அதற்கெல்லாம் மனிதர் அடங்கவில்லை. இறுதியில் சில லட்சங்களை அவர் முன்பு எடுத்து போட, அதுவரை வெறுப்பாக இருந்த முருங்கைக்காய், கரன்சியை கண்ணில் பார்த்ததும் ஹாடான பேச்சை கலகலப்பாக மாற்றி விட்டதோடு, பேச்சுவாக்கில் கட்டுகளையும் கைப்பற்றி விட்டாராம். விளைவு, மேற்படி நடிகர் கம் டைரக்டருக்கு ஒரு திருப்பதி லட்டை கொடுத்து விட்டு, லட்டு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறது படக்குழு.
Comments
Post a Comment