Tuesday,15th of January 2013
சென்னை::ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் இருபது சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையிலும் இன்னும் படத்துக்கு பெயர் தேர்வு செய்யப்படவில்லை.
தலைவன் என்ற பெயரை தேர்வு செய்தனர். இது பெரிய இடத்து பிள்ளையின் சொந்தப் படம் என்பதால் சைலண்டாக பின் வாங்கினர்.
பிறகு ரஜினியின் தங்கமகன். சத்யா மூவிஸ் பெயரை தர மறுத்ததால்... கடைசியாக அமலா பால் ட்வீட்டிய செய்திப்படி தலைவா என்ற பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.
எஸ்... இந்த பெயர் பற்றி இயக்குனரோ, தயாரிப்பாளரோ எதுவும் சொல்வதற்கு முன் அமலா பால் தனது ட்விட்டரில் விஜய்யுடன் தான் நடிக்கும் புதிய படத்தின் பெயர் தலைவா என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் விஜய் படத்தின் பெயர் என்ற நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு அமலா பாலின் மூலம் பதில் கிடைத்திருக்கிறது.
Comments
Post a Comment