Sunday,13th of January 2013
சென்னை::இயக்குவதற்கு முன் பயிற்சி முக்கியம் என்றார் கருணாகர பல்லவா. மு.களஞ்சியம், ராசு மதுரவன், கவி காளிதாஸ் போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கருணாகரபல்லவா. இவர் கூறியதாவது: சிலர் நேரடியாக படம் இயக்க வருவதாக கூறுகிறார்கள். ஒன்றிரண்டுபேர் அதில் வெற்றி பெற்றாலும் பெரும்பாலானவர்களால் வெற்றி பெற முடிவதில்லை. சினிமாவில் நீடித்து இருப்பவர்கள் எல்லோருமே பயிற்சி பெற்று வந்தவர்கள். அந்த வகையில் நானும் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் ரெடியாக இருக்கிறது.
அதற்கு முன் நடிகர், நடிகைளை வைத்து ‘நீங்காத எண்ணம்‘ என்ற பெயரில் இசை ஆல்பம் இயக்கி இருக்கிறேன். ‘ராவணன்‘ படத்தில் பிரியாமணி ஜோடியாக நடித்த திலக், ‘அழகன் அழகி‘ பட ஹீரோயின் ஆருஷிரம்யா, ‘பேசும்படம்‘ல் நடித்த தர்ஷன் நடித்துள்ளனர். நா.முத்துக்குமார், நந்தலாலா, விவேகா பாடல்கள் எழுத கார்த்திக், சின்மயி, ஹரிச்சரண், ஹரிஷ் ராகவேந்திரா, பிரசாந்தினி, பென்னி தயாள், விஜய் ஜேசுதாஸ், கல்யாணி, அம்மு பாடி இருக்கின்றனர். ஆர்.கிரிஷ் கிருஷ்ணன் இசை. கே.சி.ரமேஷ் ஒளிப்பதிவு. கொடைக்கானல், புதுச்சேரி, மகாபலிபுரம் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. அம்ருசன், அம்மு, மல்லிகா தயாரிப்பு.
Comments
Post a Comment