சென்னை::'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் கதை என்னுடையது என்று இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் புகார் கூறியிருந்த நிலையில், தற்போது, இந்த படத்தின் கதை என்னுடையது என்றும் நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உதவி இயக்குனர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்
துள்ளார்.
சிரிப்பு நடிகர் சந்தானம் தயாரித்து நடித்துள்ள 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற புதிய படம் பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் கதைக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது.
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் கதை தன்னுடைய கதைதான் என்றும், தனக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் இயக்குனர் இயக்குனர் பாக்கியராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
இது ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், நவீன்சுந்தர் என்ற சினிமா உதவி இயக்குனரும், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் கதை தன்னுடையது என்று உரிமை கொண்டாடி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், நான் கடந்த 20 ஆண்டுகளாக சினிமா உலகில், பல முன்னணி இயக்குனர்களிடம், உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளேன். அன்புள்ள சிம்பு என்ற கதையை நான் எழுதினேன். நடிகர் சிம்புவை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்து, இந்த கதையை படம் எடுக்க திட்டமிட்டேன்.
பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானத்திடம் இந்த கதையை சொன்னேன். அவரும் கதையை கேட்டுவிட்டு, நன்றாக இருப்பதாகவும், நடிகர் சிம்புவிடம், படத்தில் நடிக்க ஒப்புதல் வாங்கி தருவதாகவும் கூறினார்.
ஆனால் நான் சொன்ன கதை இப்போது, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. எனது கதையை திருடி அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
Comments
Post a Comment