இப்போது என் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. காதல் திருமணம் செய்ய ஆர்வம் - த்ரிஷா!!!

Sunday,20th of January 2013
சென்னை::பொங்கலுக்கு ரிலீசான ‘சமர்’ படம் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் த்ரிஷா, கூறியதாவது: சினிமாவுக்கு வந்து 10 வருடங்களாகி விட்டது. இப்போது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்கள் கிடைப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஜெயம் ரவியுடன் ‘பூலோகம்’, ஜீவாவுடன் ‘என்றென்றும் புன்னகை’ படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் நடிக்கிறேன். சினிமாவில் நுழைந்தவுடனே கனமான வேடம் கிடைக்காது.

அதற்குத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். ‘சமர்’ படத்தில் என் நடிப்பை பாராட்டுகிறார்கள். நடிப்பில் மெச்சூரிட்டி ஏற்பட்டிருப்பது தெரிகிறது. இந்தப்’ படத்தில் குடிப்பது போல் நடித்தது பற்றி கேட்கிறார்கள். கேரக்டருக்காக அப்படி நடித்தேன். பொதுவாழ்வில் குடிப்பவர்களைப் பற்றி கருத்து சொல்ல முடியாது. இதுபோல் வேறு சில படங்களிலும் நடித்துள்ளேன். இப்போது என் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. காதல் திருமணம் செய்ய ஆர்வம் இருக்கிறது. என்னைக் கவர்ந்தவரை இன்னும் சந்திக்கவில்லை.

இவ்வாறு த்ரிஷா கூறினார். விஷால், இயக்குனர் திரு, காஸ்டியூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் உடனிருந்தனர்.

Comments