Tuesday,22nd of January 2013
சென்னை::லட்சுமிராய் வாய்ப்பை பறித்தார் டாப்ஸி. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படத்தின் 2ம் பாகமாக உருவானது ‘காஞ்சனா’. தற்போது அதன் 3ம் பாகம் இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’, ‘காஞ்சனா’ படங்களில் லாரன்ஸ் ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமிராய். ‘முனி’ 3ம் பாகத்திலும் லட்சுமிராய் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த வாய்ப்பு டாப்ஸிக்கு கைமாறிவிட்டது.
தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் டாப்ஸி இதுபற்றி கூறியதாவது: இது சவாலான வேடமாக எனக்கு அமைந்திருக்கிறது. இதற்கான காஸ்ட்யும் அணிந்து ஒத்திகை காட்சியில் நடித்தேன். நடன இயக்குனர் லாரன்ஸ் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம். இப்படத்துக்கு கடற்கரை பகுதி லொகேஷன் தேவைப் பட்டதால் சென்னையில் ஈசிஆர் பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது. திகில் படங்கள் என்றாலே எனக்கு பயம். ஆனால் நானே அப்படியொரு படத்தில் நடிக்கிறேன். இதன் கதையை கேட்டபோது ரொம்பவும் பிடித்தது. என் வேடத்தை நல்லமுறையில் செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.
Comments
Post a Comment