58வது 'ஐடியா பிலிம் பேர்' விருதுகள் நடிகை வித்யா பாலன் தொடர்ந்து 2வது முறையாக 'பிலிம் பேர்' விருதை வென்றார்!!!
Monday,21st of January 2013
மும்பை::58வது 'ஐடியா பிலிம் பேர்' விருதுகள் வழங்கும் விழா அந்தேரியில் உள்ள ஒய்.ஆர்.எஃப் ஸ்டுடியோவில் நேற்றிரவு நடைபெற்றது. சிறந்த இந்தி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 'பர்பி' 7 விருதுகளை தட்டிச் சென்றது.
'கஹானி'யில் கதாநாயகியாக நடித்த வித்யா பாலன், சிறந்த நடிகை விருதினை பெற்றுக்கொண்டார். 'டர்ட்டி பிக்சர்' படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யா பாலன் சென்ற ஆண்டும் இவ்விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதே போல் 'ராக் ஸ்டார்' படத்தில் நடித்ததற்காக சென்ற ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்ற நடிகர் ரன்பிர் கபூர், இந்த ஆண்டு 'பர்பி' படத்துக்காக சிறந்த நடிகர் விருதினைப் பெற்றார்.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இசை உள்ளிட்ட 7 விருதுகளை 'பர்பி' பெற்றுள்ளது.
நடிகை கத்ரீனா கைப் நடனக் காட்சிகள், உஷா உதூப்பின் பாடல்களுடன் பிரமாண்டமாக நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை குல்சாரிடம் தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி வழங்கினார்.
Comments
Post a Comment