ஜுன் 26 தனுஷின் இந்திப் படம்!!!

Monday,7th of January 2013
 சென்னை::2013 கொஞ்சம் ஸ்பெஷல். பொதுவாக தென்னிந்திய நடிகைகள்தான் இந்திக்கு சென்று கோலோச்சுவார்கள். 2013 ல் நடிகர்களும் இந்தியை கைப்பற்ற துடிக்கிறார்கள்.

பிப்ரவ‌ரிஒன்றாம் தேதி விக்ரம் நடித்திருக்கும் டேவிட் படம் இந்தியில் வெளியாகிறது. ராம் சரண் தேஜாவும் இந்தியில் ஒரு படம் நடிக்க உள்ளார். இதில் ஸ்பெஷல் என்றால் தனுஷ். இவ‌ரின் முதல் இந்திப் படம் ஜுன் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய கொலவெறி பாடல் இந்தியா முழுக்க அவரை பிரபலப்படுத்தியது. கூடவே இந்திப்பட வாய்ப்பு ஒன்றையும் பெற்றுத் தந்தது. படத்தின் பெயர் ராஞ்சனா. ஆனந்த் எல். ராய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்கூல் பையனாகவும் வளர்ந்த இளைஞனாகவும் மாறுபட்ட காலகட்டங்களில் தனுஷ் வருகிறார். ஜோடி சோனம் கபூர். அபய் தியோல் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

வாரணாசி பின்னணியில் வெளியாகியிருக்கும் படத்தின் புகைப்படங்கள் படம் மீதான ஆர்வத்தை தூண்டுகின்றன. இந்த வருடம் வேறு சில இந்திப் படங்களில் தனுஷ் கமிட்டாவதற்கு ராஞ்சனா பிள்ளையார் சுழியாக அமையும் வாய்ப்புள்ளது என்பதால் படத்தின் ‌ரிசல்ட் தனுஷுக்கும் முக்கியமானது.

ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்திருப்பது இன்னொரு சிறப்பு. மனோ‌ஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Comments