ஜனவரி 25-ம் தேதி விஸ்வரூபம் திரைக்கு வருகிறது!!!

Friday,11th of January 2013
சென்னை::விஸ்வரூபம் திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:-

விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளுக்கு வருவதில் கடந்த சில வாரங்களாக சிக்கல்கள் இருந்து வந்தன. இந்த சிக்கல் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஆகியோருடன் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் முன்பு திட்டமிட்டிருந்தபடி விஸ்வரூபம் திரைப்படம் திரைக்கு வருவதில் பிரச்சினைகள் இருந்தன. தற்போது இந்த பிரச்சினைகள் முடிந்து விட்டதால் விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்க உரிமையாளர்கள், மற்றும் வினியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இம்மாதம் ஜனவரி 25-ம் தேதி 500 திரையரங்குகளுக்கு குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது.


என் தொலைநோக்கை புரிந்து கொண்டு டி.டி.எச். எனும் புதிய முயற்சிக்கு துணை நிற்க தயாரான திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments