உதயநிதி-நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 20ஆம் தேதி தொடங்குகிறது

Friday,11th of January 2013
சென்னை::உதயநிதி - நயந்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு 'இது கதிர்வேலன் காதலி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20ஆம் தேதி தொடங்குகிறது.

தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான உதயநிதி, 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் வசூல் ஹீரோவாக அவதாரம் எடுதார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்த உதயநிதி, இரண்டாவதாக 'இது கதிர்வேலன் காதலை' என்ற படத்தில் நடிக்கிறார். சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்திற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. இதில் உதயநிதி - நயன்தாரா பங்கேற்று ஜோடியாக போஸ் கொடுத்தார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Comments