Monday,7th of January 2013
சென்னை::சமந்தாவுக்கு பதில் நடிக்க ரூ.1 கோடி சம்பளமாக கேட்டார் ஸ்ருதிஹாசன். இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் அவர் நடித்த கப¢பர் சிங் படம் ஹிட்டானதையடுத்து தனது சம்பளத்தை 1 கோடிக்கு உயர்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் ‘எவடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் கால்ஷீட் கேட்டார் தயாரிப்பாளர் தில் ராஜு. முதலில் ஓகே சொன்ன சமந்தா பின்னர் கால்ஷீட் பிரச்னையால் விலகினார். இதையடுத்து புதிய ஹீரோயினை உடனடியாக தேட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் தயாரிப்பாளர். ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கலாம் என்று பட குழுவினர் கருத்து தெரிவித்ததையடுத்து அவரை அணுகினார்.
அவரோ ரூ. 1 கோடி சம்பளம் தந்தால் நடிப்பதாக கூறினாராம். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் தயாரிப்பாளர். சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டார். 2 வார காலம் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. சம்பளத்தை குறைக்காத பட்சத்தில் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் எண்ணினார். ஆனால் ராம் சரணுடன் நடிக்கும் வாய்ப்பை இழக்க ஸ்ருதி விரும்பவில்லை. இதையடுத்து தனது சம்பளத்தை 60 லட்சமாக குறைத்துக்கொண்டாராம். இதை தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டாராம். ஆனால் ஸ்ருதி தரப்பில் கூறும்போது,‘பணம் பெரிய விஷயமில்லை. நல்ல கதாபாத்திரங்கள்தான் முக்கியம். இப்படத்தில் நடிக்க தாமதம் ஆனதற்கு காரணம் கால்ஷீட் பிரித்து தருவதில் பிரச்னை இருந்தது. இதற்கும் சம்பளத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.
Comments
Post a Comment