காதலனை பிரிந்தார் எமி ஜாக்ஸன்!!!

Monday,3rd of December 2012
சென்னை::காதலன் பிரதீக்கை பிரிந்தார் எமி ஜாக்ஸன். தமிழில் ஆர்யா ஜோடியாக ‘மதராசபட்டினம் படத்தில் அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த எமி ஜாக்ஸன். இதையடுத்து விக்ரம் ஜோடியாக ‘தாண்டவம் படத்தில் நடித்தார். இதற்கிடையில் தமிழில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை கவுதம் மேனன் இந்தியில் ‘ஏக் திவானா தா என்ற பெயரில் இயக்கினார். இதில் பிரதீக் ஹீரோவாக நடித்தார். ஹீரோயினாக எமி நடித்தார். அப்போது பிரதீக், எமி இருவருக்கிடையே நட்பு மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் பார்ட்டிகளுக்கும், டேட்டிங் என்று பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றினர். நெருக்கமான காதலர்களான நிலையில் இருவரும் அதன் நினைவாக தங்கள் பெயர்களை பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்தனர். பிரதீக் லண்டன் சென்று எமி ஜாக்ஸன் பெயரை பச்சைக் குத்திக்கொண்டார். அங்கு வசிக்கும் எமியின் குடும்பத்தாரையும் சந்தித்து பேசினார். இவர்களின் காதலை எமியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். மும்பையில் உள்ள பிரபலமான பச்சை குத்தும் ஷாப்பிற்கு சென்று தனது கையில் பிரதீக் பெயரை பச்சைக் குத்திக்கொண்டார் எமி.

காதல் மலர்ந்து ஒரு வருடம் மட்டுமே கடந்த நிலையில் இருவருக்குள்ளும் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரதீக்கை பிரிந்து லண்டன் புறப்பட்டு சென்றார் எமி. அவரது பிரிவை தாங்க முடியாமல் வருத்தம் அடைந்து வீட்டிலேயே முடங்கினார் பிரதீக். இனி எமியிடம் நெருங்குவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் மனதை தேற்றிக்கொண்டு வெளியில் வர ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து புது நடிகைகளிடம் அவர் நட்பு தேடத் தொடங்கி இருக்கிறார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments